ரூ6 லட்சத்திற்கு மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்த வெளிநாட்டு பயணிகள் மகிழ்ச்சி
இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர்
ஊட்டி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர். அவர்கள் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
மலை ரயில்
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டை கடந்தும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும். குன்னூர்-ஊட்டி இடையேயும் மலை ரெயில்கள் இயக்கப்ப டுகிறது. இதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயணம் செய்து வருகின்றனர்.
மலை ரெயிலில் பயணம் செய்ய முன்கூட்டியே முன்பதிவு செய்து காத்திருந்து பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட பணம் செலுத்தி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து சில சுற்றுலா பயணிகள் பயணம் செய்யும் வசதி உள்ளது. இதை பயன்படுத்தி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணித்து, வெளிநாடுகளை போன்று ஊட்டி பயணத்தை அனுபவித்து வருகின்றனர்.
ரூ.6 லட்சம் கட்டணம்
இந்தநிலையில் இங்கிலாந்து. ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த 14 சுற்றுலா பயணிகள் ரூ.6 லட்சம் கட்டணம் செலுத்தி மலை ரெயிலை வாடகைக்கு எடுத்தனர்.தொடர்ந்து நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சிறப்பு மலை ரெயிலில் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் மலைரெயிலை பற்றி அறிந்து கொண்டனர்
ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே ஓடும் ஆற்றில் காந்தியின் அஸ்தி கரைத்த இடம், பசுமையான மலைகள், பள்ளத்தாக்குகள். தேயிலை தோட்டங்கள், ஆறுகளை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதோடு தாங்கள் பயணம் செய்த மலை ரெயிலை புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து ரெயிலில் ஏறி குன்னூர் சென்றனர். இந்த மலை ரெயிலில் பயணம் செய்தது மறக்க முடியாத நினைவாக இருந்ததாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் பழமை வாய்ந்த பாலங்கள் மற்றும் பல்சக்கரத்துடன் கூடிய தண்டவாளங்களில் நடந்து சென்று. அதனை பற்றி அறிந்து கொண்டனர்.